Print this page

M.A.,L.T. உபாத்தியாரின் கடவுள் பாடம். குடி அரசு - உரையாடல் - 13.09.1931 

Rate this item
(0 votes)

உபாத்தியாயர்:- பெட்டியை தச்சன் செய்தான், வீட்டை கொத்தன் கட்டினான், சாப்பாட்டை சமையற்காரன் சமைத்தான், உலகத்தைக் கடவுள் உண்டாக்கினார். தெரியுமா? 

மாணாக்கன்: - தெரிந்தது சார். ஆனால், ஒரு சந்தேகம் சார். உபாத்தியாயர்: - என்ன சொல்? 

மாணாக்கன்:- அப்படியானால், கடவுளை யார் உண்டாக்கினார் சார்? 

உபாத்தியாயர்:- முட்டாள்! இந்தக் கேள்வியை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது? அவர் தானாகவே உண்டானார். இனிமேல் இப்படி யெல்லாம் கேட்காதே. 

மாணாக்கன்:- ஏன் சார்? கேட்டால் என்ன சார்? உபாத்தியாயர்:- அது! நிரம்பவும் பாவம். மாணாக்கன்:- பாவம் என்றால் என்ன சார்? 

உபாத்தியாயர்:- சீ! வாயை மூடு. நீ அயோக்கியன், “குடி அரசு" படிக்கிறாயோ? ஏறு பெஞ்சி மேல். 

குடி அரசு - உரையாடல் - 13.09.1931

 
Read 115 times